சித்த மருத்துவ கருத்தரங்கம்
உடையார்பாளையம் அரசு பள்ளியில் சித்த மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சித்த மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். இதில், அரசு சித்த மருத்துவர் சையத் கரீம் கலந்து கொண்டு 'போஷான் அபியான்' திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலும், சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும். எவற்றை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் விளையாட்டு, நடைபயிற்சி போன்றவற்றின் நன்மைகள் குறித்தும், சிறுதானிய வகைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். கருத்தரங்கில் பள்ளி உதவி ஆசிரியர்கள் ஆறுமுகம், மலர்க்கொடி, கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் வானதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story