சித்த மருத்துவ முகாம்
விளாத்திகுளத்தில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்,:
விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மற்றும் ஸ்ரீ சத்யசாய் சேவா சங்கம் சார்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் தமிழ் அமுதன் மருத்துவ குணமுடைய மூலிகைத் தாவரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
இம்முகாமில் மூலிகை கண்காட்சி, மூலிகை மருந்துகள் மற்றும் உணவுக்கண்காட்சி, நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த சித்த மருந்துகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனத்தலைவர் ஆறுமுகம், மருத்துவ பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஏராளமான பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story