ஓசூர், பாகலூர், பேரிகை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஓசூர், பாகலூர், பேரிகை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:30 AM IST (Updated: 12 Jun 2023 9:10 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஜூஜூவாடி, பேகேப்பள்ளி, நாரிகானபுரம், பாகலூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, பேடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1-ல் இருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசபள்ளி, பி.முதுகானபள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேபள்ளி, பலவனப்பள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தப்பள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி, நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நர்சாபள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல் கெஜலன் தொட்டி, தண்ணீர் குண்டலபள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்திம்மசந்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story