தர்மபுரி, அரூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


தர்மபுரி, அரூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 8 May 2023 12:30 AM IST (Updated: 8 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மாதாந்திர பராமரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பைசுஅள்ளி, சோலைக்கொட்டாய் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் தர்மபுரி நகரத்துக்குட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ. ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் நகர், அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூல அள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிபட்டி, காளப்பனஅள்ளி, குப்பங்கரை, வெள்ளோலை, முக்கள்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அரூர்

இதேபோல் அரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மாம்பட்டி, அனுமன்தித்தம், கைலயரம், காட்டேரி, சட்டையாம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி புதுர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கிழானூர், வேப்பம்பட்டி, திர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிபட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியம்பட்டி, வேப்பப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story