ஓசூர் சிப்காட், ஜூஜூவாடி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
ஓசூர்:
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த சிப்காட் பேஸ்-2 மற்றும் ஜூஜூவாடி துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிப்காட் பகுதி-2, பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோரனபள்ளி, ஆலூர், புக்கசாகரம், கதிரேபள்ளி, அதியமான் கல்லூரி, பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அங்கேபள்ளி மற்றும் ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, தர்கா, பேகேபள்ளி, பேடரபள்ளி, அசோக் லேலண்டு- 1, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிப்காட் பேஸ்-1 சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.