ஏமப்பள்ளி, பள்ளிபாளையம் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்


ஏமப்பள்ளி, பள்ளிபாளையம் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விட்டம்பாளையம், ஏமப்பள்ளி, ஏ.கைலாசம்பாளையம், பெருமாம்பாளையம், பிலிக்கல்மேடு, மலப்பாளையம், பொட்லிபாளையம், கொல்லபாளையம், நைனாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கோரக்குட்டை, வேப்பம்பாளையம், செரயாம்பாளையம், அணிமூர், பன்னீர்குத்திபாளையம், பிரிதி, வேட்டுவம்பாளையம், பல்லநாயக்கன்பாளையம், பட்லூர், இறையமங்கலம், சாலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிபாளையம், வெடியசரம்பாளையம், வெள்ளிக்குட்டை, எஸ்.பி.பி.காலனி, அண்ணா நகர், காடச்சநல்லூர், ஆயக்காட்டூர், காவிரி ஆர்.எஸ், ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன் பேட்டை, பட்லூர், இறையமங்கலம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.


Next Story