தர்மபுரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி, பைசுஅள்ளி, சோலைக்கொட்டாய் துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரத்துக்குட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருப்பாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் நகர், அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல் ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.