ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறால் மீன்கள்


ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறால் மீன்கள்
x

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் மீனவர்களின் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மிகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேஸ்வரம்,

தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.

மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள், ஐஸ்பாக்ஸ், மீன்பிடி வலை, மீன்பிடி சாதனங்களை ஏற்றும் பணியிலும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 61 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்றுள்ளதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்பார்த்தனர்.

அதேபோல் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் எதிர்பார்த்ததைவிட இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் அதிகளவு கிடைத்துள்ளதால் பல படகுகள் கரை திரும்பி மீன்களை இறக்கி வைத்துவிட்டு, மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.



Next Story