தளி அருகே கர்நாடக எல்லையில்கொலை வழக்கு குற்றவாளியை துப்பாக்கியால் சுட்ட போலீசார்கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது தாக்கியதால் அதிரடி
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே கர்நாடக எல்லையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது தாக்கியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
கொலை வழக்கு குற்றவாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் உள்ளது. இதன் அருகே உள்ள மெணசிகனஅள்ளியை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 25). இவர் கடந்த 31-ந் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19) என்பவரை ஆனேக்கல் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். அப்போது ஆகாஷ், அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் மணி மீது தாக்குதல் நடத்தினார்.
விசாரணை
இதில் போலீஸ்காரர் ஆகாசிற்கு கை, உடலில் காயம் ஏற்பட்டது. அந்த நேரம் உடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகாஷின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஆகாசிற்கு காயம் ஏற்பட்டது.
அவரை போலீசார் மீட்டு ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்து பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பாலாதண்டி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது துப்பாக்கி சூடு குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருஷோத் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தளி அருகே கர்நாடக எல்லையில் கொலை வழக்கில் கைதானவரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.