புதிய இணைப்புகளுக்கு மின்மீட்டர் தட்டுப்பாடு


புதிய இணைப்புகளுக்கு மின்மீட்டர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 26 Jun 2023 7:45 PM GMT (Updated: 27 Jun 2023 10:15 AM GMT)

தேனி மாவட்டத்தில் புதிய இணைப்புகளுக்கு மின்மீட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் மின்மீட்டர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால் புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்பவர்கள் மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். கம்பம் பகுதியில் மின்மீட்டர் கிடைக்காததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மின்சாரம் இருந்தால் தான் எந்த வேலையும் செய்ய முடியும் என்ற சூழல் நிலவி உள்ளது. எனவே மின்மீட்டர் தடையில்லாமல் வழங்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் விண்ணப்பித்த அனைவருக்கும் மின்மீட்டர் பொருத்தி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை மின்மீட்டர் இருப்பில் இருந்தது. அதனால் உடனடியாக மின்மீட்டர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மின்மீட்டர் வழங்கப்படுவதால் காலதாமதமாகின்றன. வரும் காலங்களில் காலதாமதமின்றி மின்மீட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story