வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு'சீல்'


வாடகை செலுத்தாத 3 கடைகளுக்குசீல்
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:46 PM GMT)

ஊத்தங்கரை பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.

கடைகளுக்கு சீல்

ஊத்தங்கரை பேரூராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடை நடத்துபவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு வாடகை செலுத்த முடியாமல் இருந்து வந்தனர். இதனால் பேரூராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வாடகை பணம் நிலுவையில் இருந்தது.

இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடை நடத்துபவர்களிடம் வாடகை செலுத்த கோரி பலமுறை கேட்டும், நோட்டீஸ் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு மேல் வாடகை நிலுவை தொகையை செலுத்தாத 3 கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சேம் கிங்ஸ்டன் தலைமையில் அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.

எச்சரிக்கை

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், இளநிலை உதவியாளர் சேகர், பதிவுறு எழுத்தர் செண்பக பாண்டியன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். வாடகை நிலுவை வைத்துள்ள கடைக்காரர்கள் உடனடியாக பேரூராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டும். இல்லை என்றால் பாக்கி உள்ள கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் சேம் கிங்ஸ்டன் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story