கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு
கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு
தஞ்சாவூர்
ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஈரோட்டில் வணிகர் சங்க மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் நேற்று மதியம் 1 மணி வரை வியாபாரிகள் அடைத்து வணிகர் சங்க மாநாட்டுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனால் கும்பகோணம் பெரிய தெரு பெரிய கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பாபநாசம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடைவீதி, தெற்கு ராஜவீதி, கீழவீதி, சின்ன கடை தெரு, திருப்பாலைத்துறை, சன்னதி தெரு, வங்காரம் பேட்டை, 108 சிவாலயம், தஞ்சை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அனைத்து வணிகர்களும் கடைகளை அடைத்திருந்தனர்.
Related Tags :
Next Story