கொள்ளிடம் பகுதியில் கடைகள் அடைப்பு


கொள்ளிடம் பகுதியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசை கண்டித்து கொள்ளிடம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

மயிலாடுதுறை

கொள்ளிடம்

கொள்ளிடத்தில் நடந்த கடையடைப்பில் அந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் காலை முதல் மாலை வரை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. கொள்ளிடம் பகுதிக்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வருகையும் முழுமையாக குறைந்ததால் கொள்ளிடம் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. கொள்ளிடம் பகுதியில் கடைகள் அடைப்பு.கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால், புத்தூர், மாதானம், புதுப்பட்டினம், திரு முல்லை வாசல் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைகளும் முழுமையாக நேற்று காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்டிருந்தன.


Next Story