வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைப்பு
வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரிகள் செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் அதிக அளவில் வரித்தொகை பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கும், 5 வணிக நிறுவனங்களுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவைத் தொகையினை செலுத்தாத காரணத்தினால் இக்கட்டிடம் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க உத்தேசம் செய்யப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.