கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு 'சீல்'


கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்
x

கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே குரவப்புலம் ருத்ரலிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான அய்யனார் கோவிலுக்கு சொந்தமான 35 சென்ட் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி முன்னிலையில் வேதாரண்யம் சரக ஆய்வாளர் ராமதாஸ் கடைகளுக்கு சீல் வைத்தார். இதையடுத்து அந்த நிலம் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கோவில் செயல் அலுவலர் தினேஷ் சுந்தர்ராஜன், எழுத்தர் அன்பு கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story