வடமதுரை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


வடமதுரை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x

வடமதுரை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே புத்தூர் கரிவாடன்செட்டிபட்டி மலைப்பகுதியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு இன்று துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

இந்த முகாமில் ஒரு நபருக்கு 35 ரவுண்டு என அனைத்து ரக துப்பாக்கிகளிலும் போலீஸ்காரர்களுக்கு சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு 50 பேர் வீதம் மொத்தம் 4 நாட்கள் இந்த பயிற்சி முகாம் நடக்கிறது.

எனவே துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரிவாடன்செட்டிபட்டி மலைப்பகுதியில் மக்கள் செல்ல தடை விதித்தும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story