சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.18 ஆயிரம் திருட்டு; கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் 2 பெண்கள் சிக்கினர்

சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.18 ஆயிரம் திருட்டு; கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் 2 பெண்கள் சிக்கினர்
x

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.18 ஆயிரத்தை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.18 ஆயிரத்தை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

உண்டியல் காணிக்கை

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலமாகும். இங்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் செலுத்தும் பணம் மற்றும் காணிக்கை பொருட்களை ஒவ்வொரு மாதமும் எண்ணுவது வழக்கம். அதன்படி நேற்று உண்டியல் காணிக்கை பொருட்களை எண்ணும் பணியில் தன்னார்வ தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.

ரூ.18 ஆயிரம் திருட்டு

இதனை கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமித்தாய் (வயது 63), சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி மனைவி கலாவதி (63) ஆகியோர் ரூ.18 ஆயிரத்தை திருடியது கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமித்தாய், கலாவதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story