தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்
தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தின் சட்டம் ஒழுங்குகின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உளவுப்பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் சங்கர்ஜிவால். மன்னார்குடியில் காவல்துறை உதவி ஆணையராக பணியை தொடங்கியவர் சங்கர் ஜிவால். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாகக் கொண்டவர் சங்கர் ஜிவால். சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் இருந்துள்ளார். மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல தலைவராகவும் இவர் இருந்துள்ளார். சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கத்தை 2007-ம் ஆண்டிலும் ஜனாதிபதி பதக்கத்தை 2019-ம் ஆண்டிலும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டதையடுத்து சென்னை மாநகரத்தின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.