சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டகூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் துன்புறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா மோரக்கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32), கூலி தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி அவரது வீட்டிற்கு 5 வயதுடைய சிறுமியும், அவரது சகோதரனும் சென்று உள்ளனர். அப்போது சிறுமியிடம் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். அந்த சமயத்தில் சந்தோஷின் வீட்டின் இருந்து சிறுமியின் சகோதரர் அழுதுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் சந்தோஷின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.
அப்போது எதுவும் நடக்காதது போன்று சந்தோஷ் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்து உள்ளார். அப்போது சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார்.
இது குறித்த சிறுமியின் தாயார் மூலம் அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சந்தோஷிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்