சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உறவினருக்கு ஆயுள் தண்டனை சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமியை, அவரது தாயார் கைவிட்ட நிலையில் தந்தை, பாட்டி ஆகியோர் பராமரித்து வந்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தந்தை, பாட்டி ஆகியோர் இறந்த நிலையில் சிறுமியை அவரது அத்தை (சிறுமி தந்தையின் சகோதரி) சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பராமரித்து வந்தார்.

இந்தநிலையில் சிறுமிக்கு அவரது மாமா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது அத்தையிடம் தெரிவித்தபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும், இருவரும் சிறுமியை தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது மற்றொரு உறவினரிடம் தெரிவித்ததன் பேரில் அவர்கள் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தம்பதியை (சிறுமியின் அத்தை-மாமா) கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தம்பதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி கணவருக்கு ஆயுள்தண்டனையுடன், ரூ.25 ஆயிரம் அபராதமும், மனைவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.


Next Story