சிறுமிக்கு பாலியல் தொல்லை: என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை-சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை: என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை-சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Jun 2023 2:17 AM IST (Updated: 28 Jun 2023 3:06 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

என்ஜினீயரிங் மாணவர்

சேலம் கன்னங்குறிச்சி சின்னமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சபரி என்கிற சபரிராஜ் (வயது 23). சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்த மாணவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி சிறிது மனநிலை பாதித்த 17 வயது சிறுமி வீட்டிற்கு சென்று உள்ளார். அந்த வீட்டில் சிறுமியின் பெற்றோர் இல்லை. அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

7 ஆண்டு சிறை தண்டனை

இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி, போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சபரிராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரிங் மாணவர் சபரிராஜுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.


Next Story