மின்கம்பத்துடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைப்பு
ஆம்பூர் நகராட்சியில் மின்கம்பத்துடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டில் ஆம்பூர் நகராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால்வாய் உடன் கூடிய சிமெண்டு கான்கிரீட் தளம் சுமார் 540 மீட்டர் நிலத்திற்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெத்தலேகம் 4-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் போது தெருவில் இருந்த மின்கம்பங்களுடன் சேர்த்து கால்வாய் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாய்க்குள் தூண்கள் இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story