சூளகிரி அருகே மிடுதேப்பள்ளியில்சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


சூளகிரி அருகே மிடுதேப்பள்ளியில்சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

சூளகிரி அருகே மிடுதேப்பள்ளியில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் ஊராட்சிக்குட்பட்ட மிடுதேப்பள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் இந்த கிராமத்தில் 147 வீடுகளுக்கு, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, பணி முழுதடைந்துள்ளதையும் அவர், தொடங்கி வைத்தார்.

பின்னர், மிடுதேப்பள்ளி கிராமத்தில் பள்ளி கட்டிட பணி மற்றும் சமையல் அறை பணி நடைபெற்று வருகிறது. இதையும் கே.பி.முனுசாமி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகளில், சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாபு என்ற வெங்கடாசலம், வெங்கடேசபுரம் ஊராட்சி தலைவர் ஸ்ரீகண்டன், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மாதேஷ், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் முனி சந்திரப்பா, துணை செயலாளர் சின்ன அப்பையா மற்றும் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story