பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ரோபோ - காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்
காஞ்சிபுரத்தில் ரோபோட்டிக் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்வது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்,
பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்வதற்கு இயந்திரம் வாங்கி பயன்படுத்த காஞ்சிபுரம் மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த ரோபோட்டிக் இயந்திரத்தை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் சார்பில், காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை பகுதியில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை நீக்குவது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த இயந்திரம் மூலம் 20 அடி ஆழம் வரை சென்று 125 கிலோ எடை வரை அடைப்புகளை வெளியே எடுக்க முடியும் என்று அந்த இயந்திரத்தை தயாரித்துள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story