சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழராயம்புரம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

குறிப்பாக கிராமத்தின் தெற்கு தெருவில் உள்ள பொதுமக்கள் வடிகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி, மண் சாலையில் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாக்கடை நீருக்கு இடையே சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த கிராமத்தின் தெற்கு தெருவில் தார் சாலை, கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story