தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,262 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,262 வழக்குகளுக்கு தீர்வு
x

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,262 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று இந்த வருடத்தின் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தினை கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதிலும் 3,388 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 1,262 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவ்வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.18 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 489. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் செய்திருந்தார்.


Next Story