மானாவாரி நிலங்களில் எள் அறுவடை பணிகள் தீவிரம்


மானாவாரி நிலங்களில் எள் அறுவடை பணிகள் தீவிரம்
x

வெள்ளியணை பகுதியில் மானாவாரி நிலங்களில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்

மானாவாரி விவசாயம்

கரூா் மாவட்டத்தில் காவிாி, அமராவதி என 2 ஆறுகள் ஓடினாலும் அதனால் பயன் பெறும் விவசாய நிலப்பரப்பு மிகவும் குறைவே, இதனால் மாவட்டத்தின் பெரும்பகுதி மானாவாாி விவசாயமே நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடவூர், தான்தோன்றி ஆகிய ஒன்றிய பகுதிகளில் அதிக அளவில் மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது.சித்திரை மாதத்தில் உரிய அளவில் கோடை மழை பெய்தால், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் மானாவாரி நிலங்களை கோடை உழவு செய்து, தொடர்ந்து வரும் பருவ மழை காலத்தில் பயிர் செய்ய தயார் படுத்தி வைத்திருப்பர். வைகாசி மாதத்தில் பெய்யும் மழையை கொண்டு சோளம், துவரை பயிர் செய்வர்.ஆடி மாதத்தில் பெய்யும் மழையை கொண்டு எள், ஆமணக்கு, சூரியகாந்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் என மானாவாரி நிலங்களில் விளைச்சல் தரக்கூடிய பயிர்களை பயிர் செய்வர். அதன்படி இந்த ஆண்டு இப்பகுதி விவசாயிகள் பண பயிரான எள்ளையே அதிக அளவில் பயிர் செய்துள்ளனர்.

அறுவடை பணி தீவிரம்

இந்த எள் பயிர் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தற்போது நன்கு வளர்ந்து பூத்து, காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளது. சென்ற வாரத்தில் எள்ளை அறுவடை செய்ய ெதாடங்கிய விவசாயிகள் அப்போது பெய்த மழையால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். கடந்த 2, 3 நாட்களாக மழையின்றி உள்ளதால் அதை பயன்படுத்தி எள் அறுவடை பணிகளை இப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அறுவடை பணிக்கு போதுமான அளவு கூலி ஆட்கள் கிடைக்காமையால் முழு வீச்சில் அறுவடை பணி நடைபெறாத நிலை உள்ளது. இந்த நிலையில் வருகிற 20-ந்தேயில் இருந்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது கிடைக்கும் கூலி ஆட்களை கொண்டு எள் அறுவடை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story