லாரி மீது வேன் மோதி டிரைவர், கிளீனர் படுகாயம்
சூளகிரி அருகே லாரி மீது வேன் மோதி டிரைவர், கிளீனர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் பாளையம் பகுதியில் நேற்று மாலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன், லாரி மோதியது. இதில் வேனின் முன்பகுதி, அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் வேன் டிரைவர் மற்றும் கிளீனர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரதத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story