சூளகிரி அருகேலாரி மீது தனியார் பஸ் மோதல்; டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்


சூளகிரி அருகேலாரி மீது தனியார் பஸ் மோதல்; டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்
x
கிருஷ்ணகிரி

சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து நேற்று மாலை கிருஷ்ணகிரி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது. சூளகிரி அருகே சுண்டகிரி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை பஸ்சில் வந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story