தர்மபுரி அரசு மருத்துவமனையில்டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகலெக்டர் சாந்தி தகவல்


தர்மபுரி அரசு மருத்துவமனையில்டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2023 1:00 AM IST (Updated: 26 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

கலெக்டர் சாந்தி ஆய்வு

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அரசு மருத்துவமனை வளாகத்தில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டை பார்வையிட்ட அவர் அங்குள்ள படுக்க வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவிற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்வதற்கு அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது.

கொசுப்புழு ஒழிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த அளவிலான டெங்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள குடிநீர் தொட்டிகள் முழுவதும் குளோரிேனசன் பணி மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு களப்பணியாளர்கள், மூலம் மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடிக்கும் பணிகள் செயல்படுத்தவும், காய்ச்சல் கண்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டில் உடைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரமேஷ்பாபு, உள்ளிருப்பு மருத்து அலுவலர் நாகேந்திரன், குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் பாலாஜி, மருத்துவத்துறை தலைவர் வசந்த், குழந்தைகள் மருத்துவர் காந்தி, உள்ளிருப்பு உதவி மருத்துவ அலுவலர் சந்திரசேகர் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story