செந்தில்பாலாஜி வழக்கு: சிகிச்சை காலத்தை காவல் விசாரணைக் காலமாக கருதக்கூடாது - அமலாக்கத்துறை
செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அப்போது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது. அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ள என வாதிட்டார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை உரிமை. கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல் யாரையும் காவலில் வைக்கக் கூடாது. அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை; இதை அரசியல் சாசன பிரிவு 15 ஏ-வில் குறிப்பிடப்பட்டுள்ளது என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அதனைதொடர்ந்து வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.. எனவே தங்கள் தரப்புதான் முதலில் வாதங்களை முன்வைக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலாகக் கருதக் கூடாது என அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.
தங்கள் தரப்புதான் முதலில் வாதத்தை முன்வைக்க வேண்டும் என்பதில் இரு தரப்புகளும் உறுதியாக உள்ளதால் வழக்கில் அமலாக்கத்துறை, செந்தில்பாலாஜி தரப்பு இடையே காரசார வாதம் நடைபெற்று வருகிறது.