வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு


வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்  செந்தில்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
x

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரம் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் இன்று கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்ய சென்றார்.

அவரை அரசு மருத்துவ அலுவலர் அம்பிகா, டாக்டர்கள் சிவசுப்பிரமணி, செந்தில், டேவிட் விமல் குமார், பார்த்திபன், பர்ஹான் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கு மருத்துவ அலுவலரிடம், அரசு மருத்துவமனையில் தற்போது உள்ள கட்டிடங்கள் விவரங்கள் குறித்தும், நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும், மருந்து இருப்பு அறைகட்டுவது குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து மருத்துவமனையில் ரூ.42 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு பகுதிக்குச் சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

12 படுக்கை வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பகுதி முழுவதும் சுற்றிப்பார்த்து, அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சைகளை குறித்தும், அங்குள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்‌.

பின்னர் புதியதாக மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படவுள்ள குளிரூட்டும் மருத்துவ பிரிவுகளில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அ.தி.மு.க.நகர செயலாளர் சதாசிவம், பொருளாளர் தன்ராஜ், பி‌.சங்கர், நகர துணை செயலாளர் கோவிந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, செல்வராஜ் உள்பட பலர் சென்றிருந்தனர்.


Next Story