செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மேல்முறையீடு - அமலாக்கத்துறையும் கேவியட் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று அவசரமாக விசாரிக்க கோரி நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன், வக்கீல் ராம்சங்கருடன், மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி முறையிட்டார்.
முறையீட்டை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனு அக்டோபர் 30-ந்தேதி உரிய அமர்வு முன் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜி மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க கோரி அமலாக்கத் துறை சார்பில் வக்கீல் முகேஷ் குமார் மரோரியா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.