செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


Senthil Balaji
x

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்ததுடன், வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக்கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 42வது முறையாக வரும் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story