சேந்தமங்கலத்தில் கஞ்சி கலய ஊர்வலம்
சேந்தமங்கலத்தில் கஞ்சி கலய ஊர்வலம்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செவ்வாடை அணிந்தபடி ஆன்மிக ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஊர்வலமானது உலக அமைதி, நல்லிணக்கம் மற்றும் மழை பெய்ய வேண்டி நடத்தப்படுகிறது. அதேபோல நேற்று சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் முன்பாக செவ்வாடை பக்தர்கள் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார். செவ்வாடை அணிந்த ஆண், பெண் பக்தர்கள் தலையில் பால்குடம் மற்றும் கஞ்சி கலயங்களுடன் ஊர்வலமாக சென்றனர். கடைவீதி, மெயின் ரோடு, பழைய பஸ் நிலையம், பெருமாள் கோவில் தெரு வழியாக ஊர்வலம் சென்று இறுதியாக சக்தி பீடத்தை அடைந்தது. பின்னர் சக்தி பீட கருவறையில் உள்ளே சென்று அவரவர் கைகளால் பால் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அனைவரும் அம்மனுக்கு படைத்த கஞ்சியை குடித்தனர். ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு செய்திருந்தார்.