செங்காளியம்மன் வீதி உலா


செங்காளியம்மன் வீதி உலா
x

செங்காளியம்மன் வீதி உலா நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அய்யாசாமி பிள்ளை தெருவில் செங்காளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து ஆண்டுதோறும் செங்காளி அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இதன்படி 7-ம் ஆண்டு வீதி உலா நேற்று முன்தினம் தொடங்கியது. அனைத்து வார்டு பகுதிகளுக்கும் செங்காளி அம்மன் வீதி உலா சென்று மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடையும்.

முன்னதாக கோவிலில் செங்காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுக்கு பட்டு உடுத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story