பிளாஸ்டிக் கழிவுகள் தனியார் ஆலைக்கு அனுப்பி வைப்பு
செங்கோட்டை நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் தனியார் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மகாராஷ்ரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை நகராட்சி மண்டல இயக்குனா் அறிவுரையின்படியும், நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா (பொறுப்பு) உத்தரவின்படியும் சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்மாணிக்கம், காளியப்பன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story