தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் கருத்தரங்கம்


தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் கருத்தரங்கம்
x

எல்.ஐ.சி. வாரவிழாவையொட்டி தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்.ஐ.சி. வாரவிழாவையொட்டி இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்திய காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) பங்களிப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமை தாங்கினார். முதல்வர் சங்கீதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் இந்திய ஆயுள் காப்பீட்டு அலுவலர் மணவாளன் கலந்துகொண்டு பேசுகையில், எல்.ஐ.சி. நிறுவனமானது இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது. ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இன்று ரூ.40 லட்சம் கோடி வரவு-செலவு செய்து வருகிறது.இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. நிறுவனம் தான். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது என்றார்.இதையடுத்து, கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் பேசுகையில், படித்துக்கொண்டு இருக்கின்ற மாணவ- மாணவிகளும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் முகவர்களாக செயல்படுவதின் மூலம் சுயவருவாயை பெற முடியும். படிக்கின்றபோது வருவாய் ஈட்டக்கூடிய மிகவும் ஒரு கவுரவமான பணி எல்.ஐ.சி. முகவர்களாக செயல்படுவது. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில் எல்.ஐ.சி. முகவர் என்ற பணியானது மிகவும் பாதுகாப்பானது என்றார். கருத்தரங்கில் வணிகவியல், வணிக நிர்வாகவியல் துறை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிக மேலாண்மை துறை தலைவர் கமலக்கண்ணன் தலைமையிலான பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story