காவல்காரன்பட்டியில், தையல் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு


காவல்காரன்பட்டியில், தையல் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு
x

காவல்காரன்பட்டியில், தையல் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி சேர்ந்த ஏராளமான பெண்கள் தினமும் கரூர் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். இதனால் தினமும் 140 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து 3 மணி வீணாவதுடன் சோர்வும் அடைந்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வேலை வாய்ப்பு அமைத்து கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி சமுதாய கூடத்தில் தையல் பயிற்சி மையம் தொடங்கப்படும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டார். அப்போது பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக குழுவாக செயல்பட்டு பணிகளை செய்ய வேண்டும், தீபாவளி முடிந்ததும் தையல் எந்திரங்கள் பொருத்தப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்படும் என்றார். அப்போது காவல்காரன்பட்டி பொதுமக்களுக்கு சமுதாய கூடத்தில் தையல் பயிற்சி மையம் அமைகத்தால் சுய நிகழ்ச்சிகளுக்கு தடையாக இருக்கும் என்றனர். இதையடுத்து சமுதாய கூடத்தை மற்றொரு இடத்தில் அமைக்க இடத்தை தேர்வு செய்து அறிக்கை அளிக்க ஆணையர் சரவணனுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குனர் வானீஸ்வரி, ஆணையர் விஜயகுமார், வடசேரி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story