வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு


வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு
x
தினத்தந்தி 17 May 2023 12:30 AM IST (Updated: 17 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று ஆலங்குளத்துக்கு புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

ஆலங்குளம் ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள 3½ ஏக்கர் இடத்தை புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்க தேர்வு செய்தார். அப்போது ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி, கிராம நிர்வாக அலுவலர் ஞானக்கண்ணன், ஓ.பி.எஸ் அணி அமைப்பு செயலாளர் எஸ்.ராதா, நகரச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கழுநீர்குளத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மகளிர் கலைக்கல்லூரி கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story