கிரிக்கெட் வீரர்கள் தேர்வு


கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
x

கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது

சிவகங்கை

காரைக்குடி,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 23-ந் தேதி காலை 7 மணி அளவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த அணி தேர்வில் கலந்து கொள்ள வயது வரம்பு 1.9.2006 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். மேலும் அணி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் தங்களது வயது சான்றின் நகல், வெள்ளை சீருடை மற்றும் தாங்களே கிரிக்கெட் உபகரணங்களை கொண்டு வர வேண்டும். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



Related Tags :
Next Story