2-ம் நிலை போலீஸ் பணிக்கு தேர்வு


2-ம் நிலை போலீஸ் பணிக்கு தேர்வு
x
தினத்தந்தி 27 Nov 2022 12:55 AM IST (Updated: 27 Nov 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 2-ம் நிலை போலீஸ் பணிக்கான தேர்வு 10 மையங்களில் நடக்கிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கூறினார்.

விருதுநகர்


மாவட்டத்தில் 2-ம் நிலை போலீஸ் பணிக்கான தேர்வு 10 மையங்களில் நடக்கிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கூறினார்.

தேர்வு மையங்கள்

போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் நிலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்து தேர்வு கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், வி.பி. எம். கல்லூரி, விருதுநகர் ஸ்ரீவித்யா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக், வி.வி.வி. பெண்கள் கல்லூரி. செந்திக்குமார நாடார் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி, காரியாபட்டி சேது என்ஜினீயரிங் கல்லூரி, அருப்புக்கோட்டை ஸ்ரீ சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரி, செவல்பட்டி பி. எஸ். ஆர். என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 10 மையங்களில் நடைபெறுகிறது.

இந்த மையங்களில் 16,379 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9.30 மணி அளவில் அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டை

தேர்வு கூட சீட்டில் ஏதேனும் மாற்றம் இருந்தால் விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகலில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு கூட சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்.

தேர்வு கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்தின் கூடிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அல்லது இதர அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் தேர்வு கூடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

செல்ேபானுக்கு அனுமதி இல்லை

விண்ணப்பதாரர் விடைத்தாளில் எழுத நீலம், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு முடியும் வரை விண்ணப்பதாரர் தேர்வு கூடத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story