முரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


முரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
x

முரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் முரம்பு மண் கடத்துவதாக திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன் மற்றும் வருவாய்த் துறையினர் மண்டலவாடி பூசாரி வட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி நிறுத்தினர். உடனே டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்ததில் 3 யூனிட் முரம்பு மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வருவாய்த்துறையினர், அந்த டிப்பர் லாரியை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் ஆய்வாளர் ரவிமாராஜன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப் பதிவு செய்து, மண்டலவாடி பூசாரி வட்டம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story