மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்


மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
x

மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி சப் இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது மண்டலவாடி அருகே டிப்பர் லாரியில் மண் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது கல்லன் வட்டம் ஆலமரத்தின் அருகே வந்து கொண்டு டிப்பர் லாரியை மடக்கியதில் அதில் அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரியவந்தது. அதில் 3 யூனிட் மண் இருந்தது.

இதனையடுத்து மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை போலிசார் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த ஆலங்காயம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் விஜயகுமாரை (வயது 44) கைது செய்தனர்.

பின்னர் டிப்பர் லாரியுடன் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story