பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

வீரவநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருச்செல்வன் (பொறுப்பு) அறிவுரையின்படியும், வீரவநல்லூர் பேரூராட்சியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை செய்யப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா தலைமையில் நடந்த இந்த சோதனையில் சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறிய கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைக்காரர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் சுகாதார ஆய்வாளர் பிரபாகர், சுகாதார மேற்பார்வையாளர்கள் முனியாண்டி, சுடலைமணி மற்றும் பரப்புரையாளர்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story