கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
x

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

திருச்சி மண்டல உதவி புவியாளர் நாகராஜனுக்கு அரசு அனுமதி இல்லாமல் கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக கிடைத்த ரகசியதகவலின்படி நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் அரசு மருத்துவமனை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எவ்வித அனுமதியும் இல்லாமல் சுமார் 3 யூனிட் அளவுள்ள கூழாங்கற்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, நரியப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயவேல்(வயது 24) என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மண்டல உதவி புவியாளர் நாகராஜன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் கூழாங்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் சேகர் மகன் ஜெயவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story