ராமேஸ்வரத்தில் கடல் அட்டை வைத்திருந்த விசைப்படகு பறிமுதல் - மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வைத்திருந்த விசைப்படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு விசைப்படகை சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைக்கட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த விசைப்படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடல் அட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் விதிமுறைகளை மீறி கடற்கரை ஓரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டதாக 2 விசைப்படகுகள் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story