அதிமுக முன்னாள் அமைச்சருக்கு வணக்கம் வைத்த சீமான்... தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்
நாம் தமிழர் கட்சியினரும் அதிமுகவினரும் ஒருவருக்கொருவர் கொடிகளை உயர்த்தி பிடித்து மாறி மாறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து சீமான் ஈரோட்டில் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். சூரம்பட்டியில் தொடங்கிய பிரச்சார பேரணி திருநகர் காலனி பொதுக்கூட்ட மேடைக்கு சென்றது.
அப்போது கிருஷ்ணம்பாளையம் அருகே பிரச்சார பேரணி சென்ற போது அதே வழியில் முன்னாள் அமைச்சர் காமராஜ், மற்றும் பார்த்திமா பாபு உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அந்த வழியாக பேரணி சென்ற போது நாம் தமிழர் கட்சியினரும் அதிமுகவினரும் ஒருவருக்கொருவர் கொடிகளை உயர்த்தி பிடித்து மாறி மாறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த போலீசார் ஊர்வலமாகச் சென்றவர் நாம் தமிழர் கட்சியினரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். ஊர்வலம் கடந்து செல்லும் வரை அமைச்சர் காமராஜ் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார்.
பின்னர் சீமானும் காமராஜரும் வாகனத்தில் இருந்தவாறே ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர்.