சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம்
சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் நடைபெற்றது.
கரூர்
கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காந்திநகர், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் உள்ள பொதுமக்கள், முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அதிக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று பரவுவது குறித்தும், அவற்றை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story