கோடை கால சாகுபடிக்கு விதைகள் கையிருப்பில் உள்ளனகலெக்டர் கார்மேகம் தகவல்


கோடை கால சாகுபடிக்கு விதைகள் கையிருப்பில் உள்ளனகலெக்டர் கார்மேகம் தகவல்
x

கோடை கால சாகுபடிக்கு தேவையான விதைகள் கையிருப்பில் உள்ளன என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம்,

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண்மை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிற திட்டங்களை விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மில்லி மீட்டர். இதில் பிப்ரவரி மாதம் முடிய பெய்யவேண்டிய மழையளவு 16 மி.மீ ஆகும். இதுவரை 8.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

கையிருப்பில் உள்ளன

20 ஆயிரத்து 500 ஹெக்டேர் பயிர் சாகுபடி பரப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தற்போது 23 ஆயிரத்து 555 ஹெக்டேர் பரப்பளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் கோடை கால சாகுபடிக்கு தேவையான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் கையிருப்பில் உள்ளது. வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் சாந்தி உள்பட விவசாயிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அந்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம், வேளாண்மை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


Next Story